உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்ட   நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு  அமெரிக்கா தடை.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்காவில் உள்ள 3 தனிநபர்கள் மற்றும் 9 நிறுவனங்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு புதிய தடைகளை விதித்துள்ளது. உக்ரைனைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ரஷ்யர் ஒருவருக்கு எதிராகவும், உக்ரைன் மற்றும்  ரஷ்யாவில் செயல்படும் 9 நிறுவனங்களுக்கு எதிராகவும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத்துறை அறிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா மனித உரிமைகளை மீறியதாகவும், கிரீமியாவைத் தன்னுடன் இணைத்துக்  கொண்டதில் சட்டவிரோதமாக நடந்து கொண்டதாகவும் அமெரிக்கா குற்றம்  சாட்டியுள்ளது.

Pin It