உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி திரு ரஞ்சன் கோகோய்.

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக திரு ரஞ்சன் கோகோய் பொறுப்பேற்கவுள்ளார். இதற்கான அறிவிக்கையை சட்ட அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அடுத்த மாதம் 2 ஆம் தேதியுடன் தற்போதைய தலைமை நீதிபதி திரு தீபக் மிஸ்ரா ஓய்வுபெறும் நிலையில், மூத்த நீதிபதியான திரு ரஞ்சன் கோகோய் 3 ஆம் தேதி அப்பொறுப்பை ஏற்கவுள்ளார். சுமார் 13 மாதகாலம் அவர் தலைமை நீதிபதி பொறுப்பில் நீடிப்பார்.  1978 ஆம் ஆண்டு குவஹாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியில் சேர்ந்த திரு கோகோய், 2001 ஆம் ஆண்டு அந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் தலைமை வகித்தார்.

Pin It