உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார்  –  பின்னணி குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்படும்  – உச்ச நீதிமன்றம்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு ரஞ்சன் கோகோய் மீது  வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருப்பதன் பின்னணி குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று இந்த வழக்கை விசாரித்து வரும் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தெரிவித்துள்ளது. நீதிபதி திரு அருண்  மிஸ்ரா தலைமையிலான இந்த பெஞ்ச், உச்சநீதிமன்றத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், முயற்சி  மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதுகுறித்தும் ஆராய்ந்து அதற்குக் காரணமானோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெஞ்ச் எச்சரித்துள்ளது.

நீதிபதிகள் திரு ஆர் எஃப் நாரிமன், திரு தீபக் குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்த பெஞ்ச், புகார் மனு தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் உத்சவ்சிங் பெய்ன்ஸ், தன்னிடமுள்ள கூடுதல் ஆதாரங்களுடன் வரும் திங்கட்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. மனு மீதான விசாரணை, இன்றும், தொடர்ந்து நடைபெறும் என்று உச்சநீதிமன்ற பெஞ்ச் அறிவித்தது.

Pin It