உஜ்ஜவலா திட்டம் மகளிர்க்கு அதிகாரமளிக்கும் திட்டம் – குடியரசுத் தலைவர்

பிரதமரின் உஜ்ஜவலா திட்டத்தின் மூலம் பெண்களுக்குச் சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் மகளிர்க்கு அதிகாரமளித்தலில் உதவும் என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். பிரதமரின் சமையல் எரிவாயு பஞ்சாயத்து என்னும் நிகழ்ச்சி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர், இத்திட்டம் கோடிக்கணக்கான குடும்பங்களின் முகங்களில் புன்னகையைக் கொண்டுவந்துள்ளதாகக் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர  பிரதான், ஊரகப் பகுதி வாழ் மக்களைத் தூய்மையான எரிபொருள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தும் திட்டம் எனக் குறிப்பிட்டார்.

Pin It