உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நேற்று தொடக்கம்.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நேற்று தொடங்கியது. அரை மணி நேரம் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளுடன் இப்போட்டி தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வென்றது. இந்திய நேரப்படி, இன்று மாலை ஐந்தரை மணியளவில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் எகிப்து,  உருகுவேயையும், எட்டரை மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் மொராக்கோ, ஈரானையும், பதினொன்றரை மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் போர்ச்சுக்கல், ஸ்பெயினையும் எதிர்கொள்கின்றன. ஒரு மாத காலம் நடைபெறவுள்ள இந்தப் போட்டியை ஒட்டி, கால்பந்து ரசிகர்களால் ரஷ்யா விழாக் கோலம் பூண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

 

Pin It