உலகக்  கோப்பை கால்பந்துப் போட்டி – குரோவேஷியா இறுதிப் போட்டிக்குத் தகுதி.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்  கோப்பை கால்பந்துப் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் குரோவேஷியா இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதியாட்டத்தில் குரேஷியா பிரான்ஸை எதிர்கொள்ளும். இந்திய நேரப்படி, இரவு பதினொன்றரை மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

முன்னதாக சென்ற செவ்வாய் கிழமை நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

Pin It