உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி  – 3 ஆம் இடத்தை  நிர்ணயிக்கும் ஆட்டம் இன்று நடைபெறும்.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் 3 ஆம் இடத்தை நிர்ணயிப்பதற்காக இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு மணி 7.30க்குப் போட்டி தொடங்கும். முன்னதாக, அரையிறுதிப் போட்டிகளில் குரோவேஷியா, இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கிலும், பிரான்ஸ்,  பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கிலும் வென்றன. இறுதிப்போட்டி நாளை மாஸ்கோவில் இந்திய நேரப்படி இரவு மணி 8.30க்கு பிரான்ஸ், குரோவேஷியா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

Pin It