உலக உயிரி  எரிபொருள் தினத்தையொட்டிய நிகழ்ச்சி – இன்று, பிரதமர்  திரு நரேந்திர  மோதி உரையாற்றினார்.

2018, உலக உயிரி எரிபொருள் தினத்தையொட்டி, புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர்  திரு நரேந்திர  மோதி உரையாற்றினார்.. விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர், அரசு அதிகாரிகள், மாணவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இடையே, உயிரி  எரிபொருளின் முக்கியத்துவம் குறித்தும்,  இதற்கான திட்டங்களை விரிவுபடுத்துவது பற்றியும் பிரதமர் தமது கருத்துக்களைப் பகிர்ந்து  கொண்டார்.

இயற்கை உயிரி  எரிபொருளைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள், நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று அவர் கூறினார். இயற்கை உயிரி  எரிபொருளைப் பிரபலபடுத்த அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

10,000 கோடி ரூபாய் முதலீட்டில், 12 நவீன சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவி, உயிரிக் கழிவுகளை உயிரி எரிபொருளாக மாற்றும் திட்டத்தில் அரசு ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், இளைஞர்களுக்கு 1.5 லட்சம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று பிரதமர் கூறினார். உயிரி எரிபொருள் பயன்பாடு, விவசாயிகளின் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாகும் என்று கூறிய பிரதமர், எத்தனால் பயன்பாடு பெருமளவில் பணத்தை சேமிக்க உதவும் என்றும் கூறினார்.2022 ஆம் ஆண்டுக்குள், பெட்ரோலுடனான எத்தனால் கலப்பு, 10 சதவீத அளவையும், 2030 ஆம் ஆண்டுக்குள் 20 ச்டஹவீத் அளவையும் எட்டுவதற்கு அரசு இலக்கு வைத்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

 

Pin It