எகிப்தில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை        

 

எகிப்து சினாய் தீபகற்ப பகுதியில் 9 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

மேற்கு எல்லைப் பகுதியில் ஆயுதங்களைக் கடத்திச் சென்ற 15 வாகனங்களையும் அவர்கள் அழித்தனர்.

சினாயில் நடைபெற்ற இரண்டு தனித்தனிச் சம்பவங்களில் இந்தத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அறிக்கை தெரிவிக்கிறது.

மிகவும் பயங்கரமான தீவிரவாதக் குழு ஒன்றின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் தீட்டியிருந்த தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.

Pin It