எகிப்து நாட்டு அதிபர் திரு அப்துல் பட்டா அல் சிசி, ஆப்பிரிக்க கூட்டமைப்புத் தலைவராகத் தேர்வு.

எகிப்து நாட்டு அதிபர் திரு அப்துல் பட்டா அல் சிசி ஆப்பிரிக்க கூட்டமைப்புத் தலைவராக எத்தியோப்பாவில் நடைபெற்ற மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில் திரு சிசி பேசுகையில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்த தாம் தொடர்ந்து முயற்சி செய்யப்  போவதாகத் தெரிவித்தார். ருவாண்டா அதிபர் திரு பவுல் ககாமேயின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, ஆப்பிரிக்கக் கூட்டமைப்புத் தலைவராக திரு சிசி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

Pin It