எம்மைப் பற்றி

தொடக்கம்:

1-10-1939:

இரண்டாம் உலகப் போர் எழுந்தவுடன், நமது நாட்டின் வடமேற்கு எல்லைப் பகுதியிலுள்ள நேயர்களுக்காக, புஷ்து மொழியில், அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு ஒலிபரப்பு தொடங்கியது. ஜெர்மனியிலிருந்து, ஈரான், அரபு நாடுகளுக்கு எதிரான வானொலி பரப்புரைக்காக இந்தச் சேவை வடிவமைக்கப் பெற்றது.

1948:

இந்திய மற்றும் அயலக மொழிகளின் ஒலிபரப்பு, வெளிநாட்டுச் சேவைப் பிரிவுக்குட்பட்டு செயல்படத் தொடங்கியது.

1-4-1994:

தமிழ் ஒலிபரப்பு “திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்” எனப் பெயரிடப் பெற்றது.

நோக்கங்கள்:

தமிழர்களின் நீண்ட நெடிய வரலாறு, மொழி, கலை, இலக்கியம், நாட்டுப் புறக் கலைகள், கலை வண்ணம், பண்பாடு ஆகிய இன்னபிறவற்றை, அயலக வாழ் தமிழ் நெஞ்சங்களுக்கு எடுத்துச் செல்லும் முதன்மைச் சேவையின் சாளரமே எமது சேவை.

வளரும் பாரத நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள், கொள்கைகள், கலை, பண்பாடு பல்வேறு பிரச்னைகள் குறித்த கருத்து.

ஒலிபரப்பு இலக்கு:

தென்கிழக்காசிய நாடுகள்:

(இந்திய நேரம்)  காலை :

0530 –  0615

UTC 0000 – 0045

அலை வரிசை:      11740, 13795

(கிலோ ஹெர்ட்ஸ்)

இலங்கை:

(இந்திய நேரம்)    காலை:

0530 –  0615

UTC 0000 – 0045

அலை வரிசை:   1053, 7270, 9835, 11985

(கிலோ ஹெர்ட்ஸ்)

 

சிறப்புக் கூறுகள்:

(அ) பணியாற்றிச் சிறப்பித்த அலுவலர்கள்:

திரு. பி.வி. கிருஷ்ணமூர்த்தி (மேனாள் தொலைக்காட்சித் தலைமை இயக்குநர்)

எழுத்தாளர் உமா சந்திரன்.

அவ்வை நடராஜன் (தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர்)

திரு. R.A. பத்மநாபன் ( மகாகவி பாரதியார் ஆய்வாளர் )

நாடகக் கலைஞர் திரு.பூர்ணம் விஸ்வநாதன்.

நாடகக் கலைஞர் திரு. Y.G. பார்த்தசாரதி.

திரு. பி.ஏ. கிருஷ்ணமூர்த்தி

பத்மபூஷண் கவிஞர் கிருஷ்ணா ஸ்ரீனிவாஸ்

எழுத்தாளர் R.S. வெங்கடராமன் ( “கஜமுகன்” )

 

(ஆ) நிகழ்ச்சியில் பங்கேற்று நேயர்களின் நெஞ்சங்களைச்   சென்றடைந்தோர்:

திரு. டாக்டர். S. இராதாகிருஷ்ணன், மேனாள் குடியரசுத் தலைவர்.

திரு. R. வெங்கடராமன், மேனாள் குடியரசுத் தலைவர்.

டாக்டர். APJ அப்துல் கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்.

கலைஞர் திரு கருணாநிதி, மேனாள் தமிழக முதல்வர்.

“பாரத ரத்னா” MGR, திரு. M.G.ராமச்சந்திரன், மேனாள் தமிழக முதல்வர்.

“தாதா சாஹெப் பால்கே” விருதாளர், நடிகர் சிவாஜி கணேசன்.

“பாரத ரத்னா” c. சுப்ரமணியன், மேனாள் மஹாராஷ்டிரா ஆளுநர்.

கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான்.

சாகித்ய அகாதமி விருதாளர் ஈரோடு தமிழன்பன்.

சாகித்ய அகாதமி விருதாளர் கவிஞர் வைரமுத்து.

Dr.M.S. சுவாமிநாதன், வேளாண் அறிவியலாளர்.

சாகித்ய அகாதமி விருதாளர் சிற்பி.பாலசுப்ரமணியன்.

சாகித்ய அகாதமி விருதாளர் கவிஞர் மு. மேத்தா.

சாகித்ய அகாதமி விருதாளர் புவியரசு.

மேனாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

சாகித்ய அகாதமி விருதாளர் எழுத்தாளர் நீல. பத்மநாபன்.

சாகித்ய அகாதமி விருதாளர் எழுத்தாளர் D. செல்வராஜ்.

சாகித்ய அகாதமி விருதாளர் எழுத்தாளர் A. மாதவன்.

திருமதி. வேதவல்லி, கர்நாடக இசை மேதை.

திரு. T.N. சேஷகோபாலன், கர்நாடக இசை மேதை.

திரு. சுப்புடு, இசைத் திறனாய்வாளர்.

திரைப்பட நடிகர், ஓவியர், மேடைப் பேச்சாளர் திரு.சிவக்குமார்.

கவிஞர் முத்துலிங்கம்.

மேனாள் தமிழக அமைச்சர்  பொன்முடி.

எழுத்தாளர், இதழாசிரியர், வாஸந்தி.

எழுத்தாளர் சிவசங்கரி.

உலக சதுரங்க வீர்ர், திரு.விஸ்வநாதன் ஆனந்த்.

திரைப்பட ஒளிப்பதிவாளர், திரு. சந்தோஷ் சிவன்.

திரைப்படப் பின்னணிப் பாடகர், திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியன்.

இசையமைப்பாளர், திரு. A.R. ரகுமான்

திரைப்பட இயக்குநர், திரு. பாலா.

திரைப்பட நடிகர், திரு. விக்ரம்.

திரைப்படப் பின்னணிப் பாடகி, திருமதி. பி.சுசிலா

திரைப்படப் பின்னணிப் பாடகி, திருமதி. எஸ்.ஜானகி

திரைப்படப் பின்னணிப் பாடகர், திரு. கே.ஜே. ஏசுதாஸ்

திரைப்பட நடிகர், திரு. டி. ராஜேந்தர்.

கஜல் பாடகர், திரு.ஹரிஹரன்.

Pin It