எரிசக்தித் துறையில் உலக அளவில் இந்தியா பெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது – சர்வ தேச எரிசக்தி முகமை

உலக அளவில் எரிசக்தித் துறையில்  இந்தியா வளர்ந்து வரும் பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது என்று சர்வதேச எரிசக்தி முகமையின் உயர் அதிகாரியான திரு டிம் கோல்டு  தெரிவித்தார்.  இதில் அனைத்து நவீன எரிபொருட்களும், தொழில்நுட்பங்களும் பங்கேற்று இருப்பதாக புதுதில்லியில், உலக எரி சக்தி அறிக்கையை மீண்டும் வெளியிட்டு அவர் பேசினார்.     இந்தியா 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு 50 கோடி மக்களுக்கு மின்சார வசதியைச் செய்து கொடுத்துக் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.   சமீப ஆண்டுகளில் இந்த வேகம் அதிகரித்திருப்பதாகவும்,  2011-க்குப் பிறகு கூடுதலாக 4 கோடி பேர் மின்சார வசதி பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Pin It