எல்லையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சஞ்சுவான் ராணுவ முகாம் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷே முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.  இது குறித்து ஜம்முவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளுக்கு எதிரான தடயங்கள் சேகரிக்கப்பட்டு பாகிஸ்தானிடம் விரைவில் அளிக்கப்படும் என்று கூறினார்.   தீவிரவாதிகள் தொடர்பான ஆவணங்கள் இதற்குமுன்  பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டிருந்தாலும், அந்நாடு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைகள் குறித்து நேற்று அவர் ஆய்வு செய்தார்.  பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், எல்லையில் ஊடுருவல்காரர்களைக் கண்காணித்துத் தடுத்து நிறுத்துவதற்காக நவீன மின்னணு சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

 

Pin It