ஏற்றுமதித் தளவாடங்களின் செலவைக் குறைக்க மத்திய அரசு முடிவு

நாட்டில் ஏற்றுமதித் தளவாடங்களுக்கான செலவைக் குறைத்து வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட குழு ஆலோசனை நடத்தியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வர்த்தகத் துறை அமைச்சகம் அடுத்த 15 நாட்களுக்குள் ஏற்றுமதித் தளவாடங்களுக்கான செலவைக் குறைப்பது குறித்த திட்ட அறிக்கையை அமைச்சகங்கள் அதிகாரிகள் குழு தயாரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஐ ஏ எஸ் அதிகாரி திரு பினய்குமாரைச் சிறப்பு அதிகாரியாக நியமித்து வர்த்தகத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஏற்றுமதித் தளவாடங்களுக்கான செலவு அதிக அளவில் இருப்பதால் சர்வதேச சந்தையில் இந்திய சரக்குகள் குறைந்த அளவில் ஏற்றுமதியாகிறது. இதைத் தவிர்ப்பதற்கு ஏற்றுமதித் தளவாடங்களின் செலவைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

Pin It