ஏழாவது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை நடவடிக்கைகள் நேற்று நாள் முழுவது ஒத்தி வைக்கப்பட்டன. முன்னதாக நேற்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நண்பகல் வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் கூடியது எதிர்க்கட்சியினர் அவைத் தலைவர் திருமதி சுமித்ரா மகாஜனின் இருக்கைக்கு முன்பு நின்று கோஷம் எழுப்பியதை அடுத்து  மீண்டும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக அவையை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு அனைத்துக் கட்சியினரையும் கேட்டுக் கொண்ட அவைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடு, தொடர்ந்து நிலவிய அமளி காரணமாக அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார். இதனையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர்ந்து 7 நாட்களாக அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.

Pin It