ஐபிஎல் கிரிக்கெட் – தில்லி, சென்னை அணிகள் வெற்றி.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தில்லி அணி, 39 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வென்றது. ஹைதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த தில்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் எடுத்தது.

156 ரன் என்ற வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி, 18.5 ஓவரில் 116 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

முன்னதாக, கொல்கத்தாவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் சென்னை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்தது.

162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் களமிறங்கிய சென்னை அணி, இரண்டு பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், வெற்றி இலக்கை எட்டியது.

இன்று இரவு எட்டு மணிக்கு மும்பையில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மும்பை அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

Pin It