ஐபிஎல் கிரிக்கெட்  – ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் கிறிஸ்லீன் ஆட்டம் துவங்கிய சிறிதுநேரத்தில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்தது.

176 ரன் என்ற வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் அணி துவக்கம் முதல் அபாரமாக ஆடி, ஐந்தாவது ஓவரில் 50 ரன்னை எட்டியது. ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

சென்னையில் இன்றிரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது.

Pin It