ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து விலகுவதற்கான காலக்கெடுவை  நீட்டிக்க தீர்மானம் –  இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.

ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து விலகுவதற்கான காலக்கெடுவை வரும் 29 ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்க வகைசெய்யும் தீர்மானம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 412 ஓட்டுகளும், எதிராக 202 ஓட்டுகளும் பதிவாகின.

ஐரோப்பியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மற்ற 27 நாடுகள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இங்கிலாந்து வெளியேறுவது தள்ளி வைக்கப்படும். ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் திரு டொனால்டு டஸ்க், இங்கிலாந்தில் கருத்தொற்றுமை ஏற்படுவதற்குக் கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், அந்நாடு வெளியேறுவது ஒத்தி வைக்கப்படும் என்றார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரக்ஸிட் இரண்டாவது திருத்தமும் நேற்று நிராகரிக்கப்பட்டது. இந்தத் திருத்தத்திற்கு எதிராக 334 வாக்குகளும், ஆதரவாக 85 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

Pin It