ஐ எஸ் தீவிரவாதியாக சந்தேகிக்கப்படும் நபர், புதுதில்லியில் நேற்று கைது.

ஐ எஸ் தீவிரவாதியாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் புதுதில்லியில் நேற்று கைது செய்தனர். தில்லி மற்றும் உத்திரப் பிரதேசத்தில் குண்டு வெடிப்புத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் 13 பேரை புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Pin It