ஐ சி சி மகளிர் உலக டிவெண்டி டிவெண்டி கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா நியுசிலாந்தை வென்றது.

கயானாவில் நடைபெற்று வரும் ஐ சி சி மகளிர் உலக டிவெண்டி டிவெண்டி கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா நியுசிலாந்தை 34 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்தியா, 195 ரன் எடுத்திருந்தது. பின்னர் களம் இறங்கிய நியுசிலாந்து அணி, 9 விக்கெட்டுக்களை இழந்து 160 ரன் மட்டுமே எடுத்தது. இந்தியாவின் தயாளன் ஹேமலதா மற்றும் பூனம் யாதவ் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். ராதா யாதவ் 2 விக்கெட்டுகளையும் அருந்ததி ரெட்டி ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். ஹர்மன் பிரீத் கவுர் 51 பந்துகளில் 103 ரன் எடுத்தார். ஜெமீமா ரோட்ரிக்ஸுடன் அவர் 134 ரன் எடுத்த நிலையில் இந்தியா, மகளிர் டிவெண்டி டிவெண்டி போட்டிகளில் அதிகபட்சமாக 195 ரன் எடுத்தது.

Pin It