ஐ நா பாதுகாப்புப் படையுடன் இணைந்து அமைதியைப் பராமரிக்க இந்திய ராணுவ வீரர்கள் தெற்கு சூடான் பயணம்

தெற்கு சூடானில் அமைதியைப் பராமரிக்க ஐநா பாதுகாப்புப் படையுடன் இணைந்து செயல்படுவதற்காக இந்திய ராணுவ வீரர்கள் இரண்டாயிரத்து 300 பேர் அங்கு சென்றுள்ளனர்.  இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் கூறுகையில், கர்வால் ரைஃபில் ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  கடந்த அறுபது வருடங்களில் இரண்டு லட்சம் இந்திய ராணுவ வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pin It