ஐ நா மனித உரிமைக்குழுவுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது: வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் . 

 

ஐ நா மனித உரிமைக்குழுவுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.  இதற்காக நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 193 வாக்குகளில் இந்தியாவுக்கு ஆதரவாக 188 வாக்குகள் கிடைத்ததாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.  ஆசியா பசிபிக் பிரிவின் கீழ் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.  அடுத்த ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு இக்குழுவில் இந்தியா இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவுடன் 18 நாடுகள் இந்த தேர்தலில் இக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  அதிக வாக்குகளை பெற்றிருப்பதன் மூலம் சர்வதேச சமுதாயம் இந்தியாவுக்கு கொடுத்துள்ள முக்கியத்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக  ஐ நா-விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திரு சையத் அக்பருதீன் கூறியுள்ளார்.

Pin It