ஐ பி எல் கிரிக்கெட்  – பெங்களுரு அணி 17 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை  வென்றது.

ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களுரு அணி 17 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை  வென்றது. பெங்களுருவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில்  பேட் செய்த பெங்களுரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 202 ரன் எடுத்தது.

203 ரன் என்ற வெற்றி இலக்குடன் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 185 ரன் மட்டுமே எடு;த்துத் தோல்வியடைந்தது. கொல்கத்தாவிப்  இன்று இரவு எட்டு மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

Pin It