ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் குறித்து திமுக மனு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை.

மக்களவைத் தேர்தலோடு, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மாநிலத்தில் காலியாகவுள்ள 21 சட்டப் பேரவைத் தொகுதிகளில், இந்த 3 தொகுதிகளைத் தவிர, எஞ்சிய தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலோடு இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 3 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை எதிர்த்து, திமுக இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளது.

Pin It