ஒரு லட்சம் இந்திய இளைஞர்கள் ஜப்பானில் நேரடிப் பணிப் பயிற்சி பெறுவார்கள் – தர்மேந்திர பிரதான்

இந்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் இளைஞர்கள் நேரடிப் பணிப் பயிற்சிக்காக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஜப்பானுக்கு அனுப்பப்படுவார்கள். இந்தப் பயிற்சிக்கான செலவை ஜப்பான் ஏற்கும் என்று திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஜப்பானும் – இந்தியாவும் சர்வதேச திரவ எரிவாயு சந்தையை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், திரவ எரிவாயு தொடர்பான ஒப்பந்தங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது, எண்ணெய் துரப்பணத்தில் உள்ள தடைகளை நீக்குவது உள்ளிட்டவற்றுக்கு இது பயனுள்ளதாக அமையும் என்று குறிப்பிட்டார்.  ஜப்பானும் இந்தியாவும் திரவ எரிவாயு துறையில்  அதிக அளவு இறக்குமதியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Pin It