கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பேரல்களாகக் குறைக்க கூட்டமைப்பு நாடுகள் முடிவு.

கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பேரல்களாகக் குறைக்க கூட்டமைப்பு நாடுகள் முடிவெடுத்துள்ளன. 14 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் கூட்டமைப்பின் கூட்டம் வியன்னாவில் நேற்று நடைபெற்றது. இதில், அடுத்த மாதம் முதல் எண்ணெய்க் கூட்டமைப்பு நாடுகள் நாளொன்றுக்கு எட்டு லட்சம் பேரல்களும், ரஷ்யா மற்றும் அதன் கூட்டமைப்பு நாடுகள் 4 லட்சம் பேரல்களாகவும் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 30 சதவீதம் குறைந்ததையடுத்து, இந்த முடிவை எண்ணெய் கூட்டமைப்பு நாடுகள் மேற்கொண்டுள்ளன. எனினும், பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் திரு டொனால்டு டிரம்ப்  ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, கச்சா எண்ணெய்ப் பொருட்களின் விலை குறைப்பு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படும் என சவுதி அரேபியா கூறியுள்ளது.

 

 

Pin It