கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது–பிரதமர் திரு நரேந்திர மோதி

கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.  ஏ என் ஐ செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தி அவர், நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  இதுவரை இல்லாத வகையில் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடையும் பொருளாதாரமாக உள்ளது என்றும் முதலீடு செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளதால் அந்நியச் செலாவணி அதிக அளவில் நாட்டிற்கு கிடைப்பதாகவும் அவர் கூறினார்.  தொழில் தொடங்கும் முனையமாக இந்தியா உருவெடுத்து வருவதே அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதற்கு சான்று என்றும் அவர் தெரிவித்தார்.  குறிப்பாக, விமானபோக்குவரத்து துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  2014-ஆம் ஆண்டு இரண்டு கைபேசி உற்பத்தி அலகுகள் மட்டுமே நாட்டில் செயல்பட்டு வந்ததாகவும் தற்போது 120 நிறுவனங்கள் கைபேசி தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.  கைவினை பொருட்கள் தயாரிப்பாளர்களுக்காக 13 கோடி முத்ரா கடன்கள் இதுவரை வழங்கப்பட்டு உள்ளதாகவும் இவற்றுள் 3.5 கோடி கடன்கள் இதுவரை வழங்கப்பட்டு உள்ளதாகவும், 3.5 கோடி கடன்கள்ல் முதல் முறை தொழில் தொடங்குவோருக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்கட்சிகளின் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், வளர்ச்சியை அடிப்படையாகக் கொள்ளாமல் முரண்பாடு உடைய கூட்டணி என்று தெரிவித்தார்.  கும்பலாக தாக்குதல், மகளிருக்கு ஒற்றுமை நிலவுவதற்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  அசாமில் தேசிய பதிவேட்டில் விடுபட்டோருக்கு தங்களுடைய பெயர்களை இப்பதிவேட்டில் இணைப்பதற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.   பாகிஸ்தானில் புதிதாக அமையவுள்ள அரசு தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த  இந்திய அரசிற்கு உதவும் என்று நம்புவதாக பிரதமர் கூறினார்.

Pin It