கடன் வட்டி விகிதம் 6% ஆகவே தொடரப்படும் – ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி நேற்று நடத்திய பணக்கொள்கை ஆய்வுக்குப் பிறகு கடன் வட்டி விகிதத்தை மாற்றாமல் அப்படியே தொடர முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் திரு உர்ஜித் பட்டேல் தலைமையில் நடைபெற்ற 6 உறுப்பினர் பணக்கொள்கை குழு இந்த வட்டி விகிதத்தை ஆறு சதவீதமாகத் தொடர முடிவு செய்தது.  ரிசர்வ் வங்கி இதர வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன் மீதான வட்டி வீதம் ரெப்போ ரேட் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.   எதிர் முறை ரெப்போ ரேட் 5 புள்ளி 7 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி முன் அறிவிப்பை பொறுத்தவரை 2017-18ல் அது 6 புள்ளி 7 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Pin It