கடல்சார் பிரச்னைகளில் ஆலோசனைகளுக்கான அமைப்பில், பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் – இந்தியாவும் சீனாவும் வலியுறுத்தல்.

கடல்சார் பிரச்னைகளில் ஆலோசனைகளுக்கான அமைப்பில், பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை இந்தியாவும் சீனாவும் வலியுறுத்தியுள்ளன. பீஜிங்கில் நேற்று நடைபெற்ற இரண்டாவது இந்தியா – சீனா கடல்சார் விவகாரங்கள் பேச்சுவார்த்தையின் போது இருதரப்பினரும், பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். கடல்சார் பாதுகாப்பு, கடல் அடிப்படைப் பொருளாதாரம், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையேயான அரசியல் மற்றும் பாதுகாப்பு, பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தவேண்டியதன் அவசியம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Pin It