கர்தார்பூர் நெடுஞ்சாலைத் திட்டத்தை விரைவுபடுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புதல்.

கர்தார்பூர் நெடுஞ்சாலைத் திட்டத்தை விரைவுபடுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளன. பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் குருத்வாரா தர்பார் சாஹிப் புனிதத் தலத்திற்கு இந்திய பக்தர்கள்  சென்று வருவதற்காக இந்த நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பஞ்சாபில் நேற்று நடைபெற்ற இருநாட்டு அதிகாரிகளின் கூட்டத்தில் இத்திட்டத்தை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தை மீண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி வாகாவில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் உள்துறை அமைச்சக இணை செயலாளர் திரு எஸ்சிஎல் தாஸ் தலைமையில் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பாகிஸ்தான் குழுவிற்கு அந்நாட்டு சார்க் இயக்குனர் திரு மொஹமது பைசல் தலைமை வகித்தார்.

 

Pin It