கல்வி நிறுவனங்கள் வர்த்தக அமைப்புகள் அல்ல – சி பி எஸ் ஈ

CBSE பாடத்திட்டம் உள்ள பள்ளிகளில்  புத்தகங்கள் மற்றும் சீருடைகள் விற்கப்படுவதற்கு எதிராக CBSE எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வர்த்தக அமைப்புகள் அல்ல என்றும், இவ்வாறு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை விற்பது விதி மீறலாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள்  தேர்ந்தெடுக்கப்பட்ட  கடைகள் மூலமாக புத்தகங்கள் மற்றும் சீருடைகளை விற்று வர்த்தக நடவடிக்கையில் ஈடுபவதாக பெற்றோரிடமிருந்து வந்த குற்றசாட்டுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. NCERT வெளியிட்டுள்ள புத்தகங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும்CBSE பாடத்திட்டம் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Pin It