காசா – இஸ்ரேல் எல்லையில் நடந்த வன்முறை தொடர்பாக, ஐநா பாதுகாப்புச் சபை அவசரக் கூட்டம்.

காசா – இஸ்ரேல் எல்லையில் ஏற்பட்டுள்ள வன்முறை தொடர்பாக விவாதிப்பதற்கு ஐநா பாதுகாப்புச் சபை அவசரக் கூட்டத்தை நடத்தியுள்ளது. இந்த மோதலில் 50 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். அமெரிக்கா ஜெருசலத்தில் தனது தூதரகத்தைத் திறந்த பிறகு, இந்த எல்லைப் பகுதியில் வன்முறைகள் வெடித்தன. இதில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததையடுத்து, பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டம் நடத்தவேண்டும் என குவைத் வேண்டுகோள் விடுத்தது. இந்தக் கூட்டத்தின் இறுதியில் கூட்டறிக்கை ஏதும் வெளியடப்படவில்லை. கூட்டத்தின் முடிவு உடனடியாகத் தெரிய வரவில்லை. இதனிடையே, காசா எல்லையில் வன்முறைகள் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுமை காக்கவேண்டும் என்றும் மேற்கொண்டு உயிரிழப்பைத் தவிர்க்கவேண்டும் என்றும் ஐநா தலைமைச் செயலாளர் திரு அண்டோனியோ குட்ரஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Pin It