காட்மண்டுவில் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்படம் குறித்த சர்வதேச மாநாடு இம்மாதம் 17-ஆம் தேதி  துவக்கம்.

நேபாளத் தலைநகர் காட்மண்டுவில் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்படம் குறித்த சர்வதேச மாநாடு இம்மாதம் 17-ஆம் தேதி தொடங்குகிறது. அதிநவீன சமுதாயத்திற்கு நிலையான மேம்பாட்டு இலக்குகள் என்ற தலைப்பில் இந்த இரண்டு நாள் மாநாடு நடைபெறுகிறது. நேபாள கணினி சங்கங்கள் இணையம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது

இந்தியா, நேபாளம், ஜப்பான், சீனா, கொரியா நாடுகளைச் சேர்ந்த ஐசிடி பயன்படுத்துவோர், பயிற்சியாளர்கள், தொழில் முறைப் பணியாளர்கள், நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் என 500 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர். தங்களது அறிவையும்  புதிய நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்வதற்கு இந்த மாநாடு மேடை அமைத்துத் தந்துள்ளது. நிலைத்த ஐசிடி செயல்முறைகளைப் பயன்படுத்துவது  குறித்த செயல்திட்டத்தை உருவாக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் துறையினரை மாநாடு ஒருங்கிணைக்கிறது.

Pin It