காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு விரைவாகச் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு விரைவாக சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இது குறித்து நீர்வள ஆதாரத்துறையின் முதன்மை தலைமை பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லணைக்கு சென்றடைந்த பின்னர், அங்கிருந்து காவிரியில் 24 பிரிவுகளாகவும், வெண்ணாற்றில் 15 பிரிவுகளாகவும் கல்லணைக் கால்வாயில் 27 வாய்க்கால்களாக பிரிந்தும் கடை மடைக்கு தண்ணீர் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இவற்றில் உய்யகொண்டான் கால்வாய், கல்லணைக் கால்வாய் மற்றும் வடவாறு நீட்டிப்பு கால்வாய் ஆகியவை வடிவமைக்கப்பட்ட கால்வாய்களாக இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் சென்றடைய அதிக நாட்கள் ஆவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Pin It