காஸா,  இஸ்ரேல் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம்  –  இந்தியா கவலை.

காஸா,  இஸ்ரேல் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதற்கும்,  ஐம்பதுக்கும்  மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததற்கும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததற்கும்  இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பில்,  இச்சூழ்நிலையை இருதரப்பினரும் தவிர்த்து,  பேச்சு வார்த்தை நடத்துவதற்கான சுமுகமான சூழலை உருவாக்க வேண்டுமென்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்  தலைநகர்  டெல் அவிவிலிருந்து அமெரிக்க தூதரகத்தை பாலஸ்தீன தலைநகர்  ஜெரூசலத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  கடந்த 14 ஆம்  தேதி காஸா – இஸ்ரேல் எல்லைப்பகுதியில் போராட்டம் நடைபெற்றபோது இச்சம்பவம்  நிகழ்ந்தது.

Pin It