கிரேக்க காட்டுத் தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆக உயர்வு.

கடந்த மாதம் 23 ஆம் தேதியன்று, கடற்கரையோர சுற்றுலாத் தலமான மட்டியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் பெயர்ப்பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டனர். உயிரிழந்தோரில் பெரும்பாலோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். பல குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்தோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

Pin It