கிழக்கு சிரியாவில் ஐ எஸ் பயங்கரவாதக் குழுவினரின் 41 நிலைகளை அமெரிக்க கூட்டுப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கிழக்கு சிரியாவில் ஐ எஸ் பயங்கரவாதக் குழுவினரின் 41 நிலைகளை அமெரிக்க கூட்டுப் படையினர் கைப்பற்றியுள்ளனர். ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான இறுதிகட்டப் போரை  சிரியா ஜனநாயகப் படையினர் கடந்த சனிக்கிழமை தொடங்கினர். பகௌஸ் பகுதியில் 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அங்கு கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ எஸ் தீவிரவாதிகளின் பிடியிலுள்ள அனைத்துப் பகுதிகளும் அடுத்த வாரம் மீட்கப்பட்டுவிடும் என்று அமெரிக்கா அதிபர் திரு டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நான்கு ஆண்டுகாலப் போர் முடிவுக்கு வரும் என்றும் திரு டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Pin It