குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. முதல் கட்டமாக வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள 89 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது.

இந்த மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசிய பிரதமர் திரு நரேந்திர மோதி, சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பை காங்கிரஸ் மறந்துவிட்டதாக க் குற்றம் சாட்டினார். ஏழை மக்களின் நலனைக் காக்கும் அரசாக மத்திய அரசு திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் திரு ராகுல்காந்தி, சுகாதாரத் துறையில் குஜராத் மாநிலம் பின்தங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.  இணையதளத்தில் இக்கருத்தைப் பதிவு செய்துள்ள அவர், இம்மாநிலத்தில் 39 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.  போதிய மருத்துவர்கள் பணியமர்த்தப்படவில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் முதலமைச்சர் திரு விஜய் ருபானி, பாஜக தலைவர் திரு அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் திருமதி ஸ்மிருதி இரானி, செல்வி உமாபாரதி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உட்பட பலர் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Pin It