குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், கிரீஸ், சுரினாம், கியூபா நாடுகளுக்குப் பயணம்.

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், கிரீஸ், சுரினாம், கியூபா ஆகிய நாடுகளில் இம்மாதம் 16-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். முதல் கட்டமாக வரும் சனிக்கிழமை குடியரசுத் தலைவர் ஏதென்ஸ் நகருக்குப் புறப்படுகிறார்.  அவருடன் எஃகுத் துறை இணையமைச்சர் திரு விஷ்ணு தேவ் சாய் உள்ளிட்ட பெரிய குழு செல்கிறது. புதுதில்லியில் செய்தியாளர்களிடம் மத்திய ஐரோப்பாவுக்கான வெளியுறவு இணைச் செயலாளர் திரு சுப்ரதா பட்டாசார்ஜி இதனைத் தெரிவித்தார். தமது பயணத்தின்போது கிரேக்க அதிபர் புரோகோபிஸ் பவ்லோபவ்லஸ் –ஸை குடியரசுத் தலைவர் சந்திப்பார் என்று கூறினார். பின்னர் இம்மாதம் 19-ஆம் தேதி அவர் சுரினாம் செல்கிறார். அந்நாட்டு அதிபர் டிசயர் டிலானோ புட்டர்ஸ்- உடன் அவர் பேச்சு நடத்துகிறார். பயணத்தின் நிறைவு கட்டத்தில் குடியரசுத் தலைவர் இம்மாதம் 21, 22 ஆம் தேதிகளில் கியூபா செல்கிறார். கியூபா அதிபர் மிகுயெல் டயஸ் – கேனல் பெர்முடஸ் -உடன் விரிவான பேச்சுக்களை குடியரசுத் தலைவர் நடத்துக்கிறார்.

Pin It