குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

நாடாளுமன்ற வளாகம் மற்றும் சட்டப்பேரவைகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில்   காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இதில் 776 நாடாளுமன்ற உறுப்பினர்களும், நான்காயிரத்து 120 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர்

வாக்கு எண்ணிக்கை வரும் 20 ஆம் தேதி நடைபெறும்.

இந்த தேர்தலில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக  திரு ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக திருமதி மீராகுமாரும் போட்டியிடுகின்றனர்.

Pin It