குடியரசுத் துணைத்தலைவர் திரு.வெங்கையா நாயுடு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் சென்றடைவு.

குடியரசுத் துணைத்தலைவர் திரு.வெங்கையா நாயுடு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் சென்றடைந்தார். முதலாம் உலகப்போர் முடிவுற்றதன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ள அவர், பாரிஸ் அமைதி கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். 50 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றடைந்த அவர், அங்கு வாழும் இந்தியர்களை நேற்று சந்தித்தார்.

அக்கூட்டத்தில் பேசிய அவர், அமைதியை ஆதரித்தும், வன்முறைக்கு எதிராகவும் இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகக் கூறினார். அறிவியல், தொழில்நுட்பம், வேளாண்மை, கலை, கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் இந்தியர்கள் ஆற்றிவரும் பங்கு சிறப்பாக அமைந்துள்ளதாக  அவர் கூறினார். புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Pin It