குடியரசு துணைத்தலைவர்  வெங்கைய்யா நாயுடு அவர்களின் 3 நாடுகள் பயணம் இன்று துவக்கம்.

குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கைய்யா நாயுடு, செர்பியா, மால்டா, ருமேனியா ஆகிய 3 நாடுகள் பயணத்தை இன்று தொடங்குகிறார். 7 நாட்கள் பயணத்தின் முதற்கட்டமாக, அவர் செர்பியா செல்லவுள்ளார். இது குறித்து புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக இணைச் செயலாளர் டாக்டர் அஞ்சுகுமார்,  குடியரசு துணைத்தலைவரின் இந்தப் பயணத்தின்போது, அந்நாடுகளுடன் வேளாண்மை மற்றும் சுற்றுலாத்  துறைகளில் பல்வேறு   ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார். செர்பியா பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிறன்று மால்டா சென்றடையும் திரு வெங்கைய்யா நாயுடு, பின்னர் 18 ஆம் தேதியன்று ருமேனியா செல்லவுள்ளதாக டாக்டர் அஞ்சுகுமார் தெரிவித்தார்.

Pin It