குத்துச் சண்டை போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியிலில் இந்தியாவின் மேரிகோம் முதலிடம்.

குத்துச் சண்டை போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியிலில் இந்தியாவின் மேரிகோம் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 48 கிலோ எடைப்பிரிவில்  1700 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தில் உள்ளார். 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அவர் 51 கிலோ எடைப்பிரிவை எட்ட வேண்டும். தற்போது வரை, 48 கிலோ எடைப்பிரிவு, ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு நடை பெற்ற காமன்வெல்த் மற்றும் போலந்து நாட்டுப் போட்டிகளில் அவர் தங்கம் வென்றார். பல்கேரியாவில் நடந்த, ஸ்ட்ரான்ஜா நினைவுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

Pin It