குல்பூஷன் ஜாதவ் விவகாரம் – தடயங்களை ஆராய்ந்து வருவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

 

பாகிஸ்தானில் ராணுவ நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய நாட்டவர் குல் பூஷண் ஜாதவுக்கு எதிரான தடயங்களை ஆராய்ந்து வருவதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமார் ஜாவீத் பாஜ்வா கூறியுள்ளார்.

ஜாதவ் செய்துள்ள மேல் முறையீடு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்  என்றும் அவர் கூறினார்.

இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இதனைத் தெரிவித்தது.

சென்ற மாதம் ஜாதவ் ஜென்ரல் பாஜ்வாவிடம் கருணை மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

உளவு பார்த்ததாகவும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறிச் சென்ற ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்தது.

இதனை எதிர்த்து தி ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தததை அடுத்து இந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

Pin It