கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணுஉலையில் நேற்று மாலை முதல் மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணுஉலையில் நேற்று மாலை முதல் மின் உற்பத்தி தொடங்கியது. முதல்கட்டமாக, 300 மெகாவாட்  மின் உற்பத்தி நடைபெற்று வருவதாகவும், இது படிப்படியாக அதிகரித்து, ஆயிரம்  மெகாவாட்டை எட்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த அணுஉலை மின்உற்பத்தி, கடந்த மாதம் 2 ஆம்  தேதி நிறுத்தப்பட்டது

இதற்கிடையே, தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று  மாநில அமைச்சர் திரு கடம்பூர் ராஜு கூறியுள்ளார். நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர்மின் உற்பத்தியில் ஏற்பட்டிருந்த பிரச்னையும் தற்போது சரிசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். அனைத்துத் துறைகளிலும் மாநில அரசு சிறந்து விளங்குவதாகவும்  அமைச்சர் தெரிவித்தார்.

Pin It