கூட்டு நீதித்துறைக் குழு அமைக்க  இந்தியா அளித்த யோசனைக்கு  பாகிஸ்தான் ஆக்கப்பூர்வ  பதில்.

மீனவர்கள் பிரச்னை தொடர்பாக ஆய்வு செய்ய கூட்டு நீதித்துறைக் குழு அமைக்கப்பட  வேண்டும் என்ற இந்தியாவின் யோசனைக்கு பாகிஸ்தான் ஆக்கப்பூர்வமான முறையில் பதிலளித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் தூதரிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தார். இதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில், கடந்த மார்ச் 7 ஆம் தேதி பாகிஸ்தான் பதிலளித்ததாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் குழு இந்தியா வருவதற்கான தேதிகளை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தரப்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம்  பெற்றுள்ளவர்களின் பெயர்கள் பாகிஸ்தானுக்கு நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு  முதலில்  அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். இதுவரை ஏழு முறை கூடியுள்ள இந்தக் குழு, கடைசியாக 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கூடி ஆலோசனை நடத்தியது.

 

Pin It