கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடி விபத்து – ஐந்து பேர் உயிரிழப்பு

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் , நால்வர் காயமடைந்தனர். ஓ என் ஜி சி-க்குச் சொந்தமான சாகர் பூஷண் கப்பலில்  பராமரிப்புப் பணியின் போது ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ உதவிகள் வழங்கவும் இவ்விபத்து குறித்த விசாரணையைத் தொடங்கவும் கொச்சின் கப்பல் கட்டுமான தளத்தின் நிர்வாக இயக்குநருக்கு, கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.

Pin It