கோயில் நிலக் குத்தகை விலை – குழு அமைக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலங்களைக் குத்தகை விடுவதற்கான விலை நிர்ணயம் செய்யக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக  அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி திரு ஆர் மகாதேவன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்குப் பிறப்பித்த உத்தரவில் சந்தை விலை அடிப்படையில் இக்குழு குத்தகைத் தொகையை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று கூறினார். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் அவர் உத்தரவிட்டார். கோவில் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கோவிலின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும் நீதிபதி தமது உத்தரவில் கூறியுள்ளார்.

Pin It