கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்  –  பிரதமர் திரு நரேந்திர மோதி, தொடர்ந்து கண்காணிப்பு.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தலைமைச் செயலாளர் திரு ராஜீவ் குமார் தலைமையில் உயர்மட்டக் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. இதற்கிடையே, அம்மருத்துவமனையின் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோதி, அங்கு நிலவி வரும் தற்போதைய சூழ்நிலை குறித்து மத்திய மற்றும் மாநில அதிகாரிகளிடமிருந்து  தொடர்ந்து தகவல்களைப் பெற்று வருகிறார். சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல் மற்றும் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோர் கோரக்பூரில் முகாமிட்டு நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர். விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகம் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் திரு அசுதோஷ் டாண்டன் கூறியிருக்கிறார்.

Pin It