கோவையில் சங்கல்ப் சே சித்தி நிகழ்ச்சி  – மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு.

பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் முன்னெடுப்பான புதிய இந்தியாவை நோக்கிய, 2017 – 2022 க்கான, ’சங்கல்ப் சே சித்தி’, அதாவது உறுதியுடன் உழைத்து வெற்றி காண்போம் என்னும் திட்டம், கோவையிலுள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை கலை மற்றும் வணிகவியல் கல்லூரி வளாகத்தில் இம்மாதம் 12 ஆம் தேதியன்று துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர், டாக்டர் மகேஷ் ஷர்மா அவர்கள் கலந்து கொண்டார்.

2017-2022 க்கான, புதிய இந்தியா இயக்கம், நம் நாட்டை வறுமை, ஊழல், பயங்கரவாதம், மதவாதம், ஜாதிப் பிரிவுகள் மற்றும் சுத்தமின்மை போன்ற குறைகளிலிருந்து விடுவிக்க எடுக்கப்பட்ட முக்கிய முன்னெடுப்பாகும். நிகழ்ச்சியில் பேசுகையில், நம்முடைய வழிமுறைகளை மாற்றி, நம் நாட்டில் புதிய மறுமலர்ச்சி உண்டாக்க உறுதி பூண வேண்டியதன் அவசரத் தேவையை அமைச்சர் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவரும், புதிய இந்தியாவை உருவாக்க, கூட்டாக உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

Pin It